ஹோம் /தேனி /

தேனியில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக எஸ்.பியிடம் புகார் மனு...

தேனியில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக எஸ்.பியிடம் புகார் மனு...

எஸ்.பியிடம்

எஸ்.பியிடம் புகார் மனு

Theni | தேனியில் போராட்டத்தின்போது காயம்ஏற்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வனவேங்கை கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வன வேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை ஒட்டி, தங்களை காயப்படுத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பொதுமக்கள் :-

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மதுரை சாலையில் வனவேங்கை கட்சி சார்பாக நரிக்குறவர் என்னும் ஜாதிப் பெயரில் குறவர் சொல்லை நீக்கிட வேண்டும். வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களால் வக்ரா போக்லி குருவிக்காரர் என்று அழைக்கப்படும் உண்மையான ஜாதிப் பெயரைக் கொண்ட மக்களை குறவர் ஜாதி பெயரை இணைத்து பழங்குடியின பட்டியலில் நரிக்குறவர் என்று சேர்க்க மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும்.

புகார் அளிக்க வந்த மக்கள்

நரிக்குறவர் நலவாரியம் என்னும் நலவாரிய பெயரில் குறவர் சொல்லை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் செப்டம்பர் 22-ம் தேதி ஈடுபட்டனர்.

எஸ்.பி அலுவலகம்

அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

எஸ்.பியிடம் புகார் அளிக்க கூடிய மக்கள்

இதில் போராட்டக்காரர்கள் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதால் தங்களை காயப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து உள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni