முகப்பு /Theni /

Theni : வலிமை பட பாணியில் தேனியில் சங்கிலி பறிப்பு சம்பவம்.. கணவருடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..

Theni : வலிமை பட பாணியில் தேனியில் சங்கிலி பறிப்பு சம்பவம்.. கணவருடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..

X
தேனியில்

தேனியில் சங்கிலி பறிப்பு சம்பவம்..

Theni District : தேனி மாவட்டம் பிசி பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் கழுத்திலிருந்த சங்கிலியை பறிக்க முயற்சித்ததில் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம்

  • Last Updated :

தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் உள்ள கோடாங்கிபட்டி  கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ். இவர் தனது மனைவி மாரியம்மாளுடன் (வயது 42) வீட்டிற்கு தேவையான பொருட்களை தேனியிலிருந்து வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் கோடாங்கிபட்டி நோக்கி நேற்றிரவு வந்து கொண்டு இருந்தனர்.

தேனி போடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மில் அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்களின் இரு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பறிக்க முயன்று உள்ளனர்.

இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாரியம்மாள் படுகாயமடைந்துள்ளார். தங்கச் சங்கிலியை பறிக்க வந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாக சாலையில் சென்றவர்கள் மாரியம்மாள் மற்றும் அவர் கணவரை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த பிசி பட்டி காவல்துறையினர் படுகாயமடைந்த மாரியம்மாள் மற்றும் அவரது கணவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Theni, Valimai