Home /theni /

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 2,000 கன அடியாக குறைப்பு

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 2,000 கன அடியாக குறைப்பு

வைகை அணை

வைகை அணை

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு, விநாடிக்கு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்துக்காக கடந்த 8ம் தேதி முதல் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படட்டது.

    கடந்த 6 நாட்களாக மொத்தம் 1,148 மில்லியன் கனஅடி நீரை திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு
    வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு, விநாடிக்கு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 900 கன அடி என மொத்தம் விநாடிக்கு 2,969 கன அடி வீதம் தண்ணீா்  திறக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீா் மட்டம் 69.26 அடியாகவும், அணைக்கு தண்ணீா் வரத்துத் விநாடிக்கு 2,318 கனஅடியாகவும் இருந்தது. அணையில் தண்ணீா் இருப்பு 5,639 மில்லியன் கன அடியாக இருக்கிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி