ஹோம் /தேனி /

தேனி உத்தமபாளையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இடிப்பு

தேனி உத்தமபாளையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இடிப்பு

கோயில் இடிப்பு

கோயில் இடிப்பு

Theni District News : உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கோயிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கோயிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள அப்துல் காதர் லெப்பை தெருவில் பேரூராட்சிக்கு சொந்தமான பொதுபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கோயிலை இடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள நபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயிலை இடிப்பதற்கு அனுமதி பெற்று வந்தனர்.

இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயிலை அப்புறப்படுத்துவதற்காக உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி தலைமையில் காவல்துறையினர் உதவியோடு கோயிலை இடிப்பதற்கு பேரூராட்சி ஊழியர்கள் முற்பட்டனர்.

இதையும் படிங்க : தேனி மாவட்ட மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்...

ஆனால் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவினர் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உத்தமபாளையம் கோட்டாட்சியர் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் மதுக்குமாரி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்படாததால் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கோயிலை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் உத்தமபாளையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni