Home /theni /

குடும்ப வறுமையை கடந்து சாதிக்கத் துடிக்கும் மீன் வியாபாரியின் மகன்..

குடும்ப வறுமையை கடந்து சாதிக்கத் துடிக்கும் மீன் வியாபாரியின் மகன்..

தேனி

தேனி - உத்தமபாளையம் சிறுவன்

Theni Uthamapalayam : தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல் அஜீஸ் சிலம்ப போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் நிலையில், குடும்ப சூழல் அவரின் பாய்ச்சலுக்கு தடையாக அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அப்துல் அஜிஸ் . சிறு வயதிலிருந்தே விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்ட அப்துல் அஜீஸ் காலை மற்றும் மாலை வேளைகளில் கராத்தே, சிலம்பம், மான்கொம்பு, ஜூடோ, ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார்.

படிப்பையும் தாண்டி விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க கடுமையாக பயிற்சி பெற்று , எங்கு தனித்திறன் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று பரிசுகளை வெல்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார்.

உத்தமபாளையம் சிறுவன்


மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் முதல் பரிசும், 50 முதல் 60 கிலோ எடைப் பிரிவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று பிளாக்பெல்ட், சவுத் இந்தியன் ஓபன் கராத்தே போட்டியில் மூன்றாம் பரிசு, தொடர்ந்து 75 நிமிடங்கள் ஸ்கேட்டிங் செய்ததற்காக யுனைடெட் கலாம் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு, உள்ளிட்ட பல்வேறு பரிசுகளையும், பதக்கங்களையும் குவித்து வருகிறார் அப்துல் அஜீஸ். சிலம்பம் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

உத்தமபாளையம் சிறுவன்


நிதி உதவி தேவை :-

இதுகுறித்து அப்துல் அஜிஸின் தந்தையான அகமது மீரான் கூறுகையில், " நான் உத்தமபாளையம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் கடை நடத்தி பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது மகன் விளையாட்டுத்துறையில் மிகவும் ஆர்வமாக உள்ளான். சிலம்பம் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்று பரிசுகளை வெல்ல துடிக்கும் அப்துல் அஜீஸ்க்கு உதவ போதிய வருமானம் இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு செல்வது என்று தெரியாமல் உள்ளோம். தமிழகத்திற்காக சிலம்பம் போட்டியில் பங்கேற்று பல்வேறு சலுகைகளை பெற ஆர்வமாக உள்ள என்னுடைய மகனுக்கு மாவட்ட நிர்வாகம் இலவச பயிற்சி அல்லது நிதி உதவி ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் போது என் மகன் பல பரிசுகளை வெல்ல வாய்ப்புள்ளது என்றார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி