Home /theni /

தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவன் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழப்பு 

தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவன் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழப்பு 

Accident 

Accident 

Theni District: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தமபாளையம் : தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவன் கல்லூரி பேருந்து மோதி பலி

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சாலை விபத்து :-

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இவரது இளைய மகன் சந்துரு. உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 16 வயதாகும் சந்துரு 11 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

    தற்போது பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சந்துரு இன்று வழக்கம் போல் தேவாரம் பகுதியில் இருந்து ராயப்பன்பட்டி சென்றுள்ளான்.

    இதற்கிடையே உத்தமபாளையம் புறவழிச்சாலை கோகிலாபுரம் விலக்கு அருகே நடந்து சென்று மற்றொரு வாகனத்தில் ஏறிச் செல்ல முற்பட்டபோது, சின்னமனூரில் இருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சந்துரு மீது பலமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த 108 பணியாளர்கள் காயமடைந்த சந்துருவை முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு உயிரிழந்தான்.

    இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உத்தமபாளையம் காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஒட்டி வந்த ஓட்டுனரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி