Home /theni /

உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாண நிகழ்வு - ஏராளமானோர் வழிபாடு 

உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாண நிகழ்வு - ஏராளமானோர் வழிபாடு 

உத்தமபாளையம்

உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் திருக்கோயில்

Uthamapalayam Narasinga Perumal Temple | தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள நரசிங்க பெருமாள் கோயிலில் தேவி மற்றும் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ளது இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத யோக நரசிங்க பெருமாள் திருக்கோயில். இக்கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கோயில் பராமரிக்கப்பட்டு கோயில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வருடம் தோறும் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு புதன் கிழமையன்று (செப் 7) நடைபெற்றது.

    அதன்படி நான்காவது வருஷாபிஷேக திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் செவ்வாயன்று மாலையில், பெருமாளுக்கு விஷ்வ சேன ஆராதனை சுதர்சன ஹோமம் உற்சவ பெருமாள் தாயார்களுக்கு அலங்கார திருமஞ்சனம் நிகழ்வு நடைபெற்றது,

    தேனி உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாணம்


    இக்கோயிலில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்ரீ மகாலட்சுமி தயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ரங்கநாதர் , கருடாழ்வார் , ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் ஆகியோர்களுக்கு காலை 7.30 மணி அளவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேனி உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாணம்


    அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ தேவி , பூதேவி பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பெருமாளின் திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் பெற ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி