தேனி மாவட்டத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் சுரபி நதி என்று அழைக்கப்படும் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் அமைந்துள்ளது உத்தமபாளையம் திருகாளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோயவில். இது தென் காளஹஸ்தி என்றும் போற்றப்படுகிறது.
ஆடி மாதம் என்றாலே இங்கு திருவிழா கோலம் தான். ஆடி மாதத்தில் ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

ஞானாம்பிகை கோவிலில் கங்கா தீப வழிபாடு..
ஆடி மாதத்தில் முக்கிய நாளான ஆடி பதினெட்டாம் நாளில் ஆற்றங்கரையோரம் உள்ள விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்த பெண்கள், நாகம்மாள் கோவிலில் மஞ்சள் வைத்து வழிபாடு செய்தனர்.

முல்லைப்பெரியாற்றில் கங்கா தீப வழிபாடு..
பின்னர் முல்லைப் பெரியாற்றில் இரு விளக்குகள், மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும் கிராமப் பகுதிகளில் நல்ல மழை வர வேண்டும் எனவும், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடவும் ஞானாம்பிகையை வழிபட்டு ஆடிப்பெருக்கு நாளில் விளக்குகளை ஆற்றில் விடும் கங்கா தீப வழிபாடு செய்தனர்.

கங்கா தீப வழிபாடு..
மிகவும் புகழ் பெற்ற தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் இந்த கோயிலுக்கு ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலிப் பெண்கள் தாலி பெருக்கி போட்டுக்கொண்டால் நன்மை ஏற்படும் எனவும், கன்னிப்பெண்கள் கங்கா தீபா வழிபாடு செய்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளதால் தேனி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் இக்கோவிலில் வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.

ஞானாம்பிகை கோவிலில் கங்கா தீப வழிபாட்டுக்காக குவிந்த பெண்கள்
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.