முகப்பு /தேனி /

சோலி முடிஞ்சிச்சி..! அரிசிக்கொம்பனை அழைத்து செல்லும்போது அவிழ்ந்த கயிறு..!

சோலி முடிஞ்சிச்சி..! அரிசிக்கொம்பனை அழைத்து செல்லும்போது அவிழ்ந்த கயிறு..!

X
அரிசிக்கொம்பன்

அரிசிக்கொம்பன்

Arisi Komban Wild Elephant : அரிசிக்கொம்பனை அழைத்துச் செல்லும் வழியில் யானை கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் ஒற்றைக்காட்டு யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஜூன் 5ம் தேதி அதிகாலை சின்ன ஓவுலாபுரம் அருகே உள்ள பெருமாள் கோயில் பகுதியில் உலா வந்த அரிசிக் கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை பிரத்யேக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டது.

அரிசிக்கொம்பன்

தேனி சின்ன ஓவுலாபுரம் பகுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேனி நகர் பகுதி வழியாக அரிசிக்கொம்பனை வனத் துறையினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், குன்னூர் சுங்கச்சாவடி பகுதியில் செல்லும்போது அரிசிக்கொம்பனை கட்டப்பட்டிருந்த கயிறு எதிர்பாராத விதமாக அவிழ்ந்தது. அரிசிக்கொம்பன் யானையினை கட்டி இருந்த கயிறு அவிழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யானை எந்தவித அசைவும் இன்றி மயக்க நிலையிலையே இருந்ததால் உடனடியாக வனத்துறை ஊழியர்கள் அவிழ்ந்த கயிறை மீண்டும் நன்றாக கட்டிய பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றனர்.  இதனால் குன்னூர் சுங்கச்சாவடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni