Home /theni /

தேனியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்

தேனியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்

தேனி

தேனி

Trolley Shops Will Be Provided In Theni | தேனி மாவட்டம் கம்பத்தில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு 90 தள்ளுவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் கம்பத்தில், மத்திய அரசின் தீன தயாள் அந்தியோதய யோஜன திட்டத்தின் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கம்பம் நகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு 90 தள்ளுவண்டிகள் வழங்க தயார் நிலையில் உள்ளன.

தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது, நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வறுமையை நீக்குவதற்காகவும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

இதையும் படிங்க ; தோட்டக்கலை துறையை நாடி அதிக லாபம் ஈட்டுவது எப்படி? 

கடந்த ஜூன் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 10 கோடி வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊரக வீட்டிலிருந்தும் ஒரு பெண்ணிற்கு சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் திறன் மேம்பாட்டுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

சுய உதவி வழங்கும் நோக்கத்துடன், சமூக நிபுணர்களின் மூலமாக சமூக நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், இதர வறுமை ஒழிப்பு திட்டங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டு உள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீண்டகால ஆதரவை பெறும் நோக்கத்தோடு தேசிய, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிலைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது, இதன் மற்றொரு சிறப்பம்சம்.

மத்திய அரசின் தீன தயாள் அந்தியோதய யோஜன திட்டத்தின் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு 90 தள்ளுவண்டிகள் வழங்க தயார் நிலையில் உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தெரிவித்துள்ளதாவது, “சாலையோர வியாபாரிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இரும்பு தள்ளு வண்டிகள் வந்துள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் நிலை ஏற்படும்” என்றார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி