முகப்பு /தேனி /

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை.. போடி வர்த்தக சங்கம்!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை.. போடி வர்த்தக சங்கம்!

X
பள்ளி

பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை

Theni District | தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வர்த்தக சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வர்த்தக சங்கம் சார்பில்,பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வர்த்தக சங்கம் :-

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள வர்த்தக சங்கத்தின் 86 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போடிநாயக்கனூரில் உள்ள வர்த்தக சங்கத்தின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போடிநாயக்கனூர் வர்த்தக சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2021-22 ஆம் ஆண்டில் பயின்ற மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்,பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்த மனைவி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தக் கல்வி உதவித் தொகை தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமாக அமையும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கூறினர்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் மற்றும் தனசேகரன், செயலாளர் செல்வகுமார் பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Bodinayakanur Constituency, Government, Local News, Scholarship, Theni