முகப்பு /தேனி /

தேக்கடி மலர் கண்காட்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்..  

தேக்கடி மலர் கண்காட்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்..  

X
தேக்கடி

தேக்கடி மலர் கண்காட்சி

Thekkady Flower Fair 2023 : தேக்கடி 15வது மலர் கண்காட்சி மேள தளங்களுடன் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 20,000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர். 

  • Last Updated :
  • Theni, India

தேக்கடி 15வது மலர்கண்காட்சி மேள தளங்களுடன் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 20,000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அதனை பார்வையிட்டு சென்றுள்ளனர் . மலர் கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு தேக்கடி 15வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கியது. இது, மே 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் இந்த மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில்,மொத்தம் 44 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மலர் கண்காட்சி தொடங்கிய 10வது நாளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்கள் மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். தேக்கடி பகுதியில் கடைசியாக 2022ம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை தமிழக மற்றும் கேரள பகுதியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தேக்கடி மலர் கண்காட்சி

இதையும் படிங்க : மதுரை சித்திரை திருவிழா 2023| கீழமாசி வீதியில் நடப்பட்டது முகூர்த்தக்கால்!

இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மலர் கண்காட்சிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் அதிகமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சிக்கு வருகை புரிகின்றனர்.

இங்கே, பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

30,000 சதுர அடியில் 50க்கும் மேற்பட்ட வகையான மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியில், பார்வையாளர்களை கவரும் விதமாக, வண்ண விலக்குகள், குழந்தைகளைக் கவரும் உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சமா இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், 44 நாட்களில்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே தமிழக மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த மலர் கண்காட்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Theni