மேற்கு தொடர்ச்சி மலை வட்டக்கானல் பகுதியில் கனமழை பெய்ததால் தேனி மவாட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கும்பக்கரை அருவி பெரியகுளத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்கிற மழைநீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி கும்பக்கரை அருவியை வந்தடைகிறது.
வட்டக்காணல் பகுதியில் பெய்த திடீர் கனமழை
இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சீராகவே இருந்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் திடீர் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் படிக்க : மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..
அப்போது, கும்பக்கரை அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அனைவரும் அருவியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி வந்தனர்.
அருவியில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
இந்நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளை அருவியின் இரு பகுதியும் பிரித்து பாதுகாப்பாக நிறுத்தி, வெள்ளம் பெருக்கு சீரானதும் அருவியின் மறுபக்கம் இருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்து அவரவர் ஊர்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் தடையும்:
இத்தகவல் அறிந்த தேவதானப்பட்டி வனச்சரங்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் அதிகப்படியான வன ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தினர்.மேலும் கும்பக்கரை அறிவிப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க : ஆளை மயக்கும் அவலாஞ்சி... ஊட்டி வனப்பகுதிக்குள் ஒரு மினி சொர்க்கம்..
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக அருவியில் குளிப்பதற்கு வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகிய பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மீண்டும் தடை:
இதனிடையே கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் தற்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் வெளியேற்றினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni