Home /theni /

Theni | அருவிகள், அணைகள், மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி

Theni | அருவிகள், அணைகள், மலைகள்- எழில் கொஞ்சும் பேரழகால் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் தேனி

தேனி மேகமலை

தேனி மேகமலை

Theni News | சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, இந்த ஊருக்கும் சொந்தமானவர் இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டம் தான் தேனி மாவட்டம்.

மேலும் படிக்கவும் ...
"சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரப் போல வருமா” இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை, இந்த ஊருக்கும் சொந்தமானவர். இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம்தான்.

மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் தேனி மாவட்டம்

தென்மேற்கு பருவமழை காலத்தின் பொழுது தேனி மாவட்டத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் திரும்பிப் போக மனமில்லாமல் "இங்கேயே தங்கி விடலாமா" என ஏக்கம் கொள்ளும் அளவிற்கு கொள்ளை அழகு கொண்டது தேனி மாவட்டம்

தேனி கோவில்


விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்ல விரும்புவோர் முதலில் தேர்ந்தெடுப்பது தேனி மாவட்டமாக தான் இருக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களிலும் நிலவும் காலநிலை தேனியை சொர்க்கம் என்றே அழைக்க வைக்கும்.

திரும்பி பார்க்கும் திசைகளில் எல்லாம், பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும் பல்வேறு இடங்களை உள்ளடக்கியது தேனி மாவட்டம். மனதை மயக்கும் இயற்கை வளம் கொண்ட சுற்றுலா இடங்களையும், வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக தலங்களையும் ஒருசேர அமைய பெற்றிருப்பது தேனி மாவட்டத்தின் கூடுதல் சிறப்பு

தேனி


சுற்றுலாத்தலங்கள்:

சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி போன்ற இயற்கையாக உருவான சுற்றுலாத் தலங்களும், வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, ஹைவேவிஸ், குரங்கணி, டாப்ஸ்டேஷன் போன்ற பசுமை போர்த்திய சுற்றுலா இடங்களும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளன.

அத்துடன் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில், போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், மாவூற்று வேலப்பர் கோயில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்பட பல்வேறு ஆன்மிக சுற்றுலா தலங்களும் இங்கு உள்ளன.

தேனி அணை


மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். தமிழ்நாட்டில் விவசாயத்தில் தஞ்சைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் விளங்குகிறது. முக்கிய பயிர்களாக நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, வெற்றிலை பயிரிடப்படுகிறது. மேலும் தோட்டப்பயிர்கள் ஆக தேயிலை, கொக்கோ, திராட்சை, காபி, ஏலக்காய் போன்றவைகளும் பயிரிடப்படுகின்றன.

கம்பம் பள்ளத்தாக்கு:

தேனி மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் நெல் விசயத்தையும் திராட்சை விவசாயத்தையும் கண்டு மெய் மறக்காதவர்கள் இருக்கவே முடியாது. கண்களை வருடும் அழகு அது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பச்சைப் பசேல் தேயிலை தோட்டங்கள், மலைகளின் மீது போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதி கண்களை வருடும்.

தேனி அணை


இதுமட்டுமின்றி கேரள மாநிலம் மூணாறு, தேக்கடி, குமுளி போன்ற பகுதிகளுக்கும் தேனியை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் , கேரள மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வந்து செல்வார்கள்.

தேனி மாவட்டத்தில் கேரளா எல்லையை ஒட்டி அமைந்து உள்ளது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி. கேரள மாநிலத்திற்கு மிக அருகில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி அமைந்து உள்ளதால் எப்போதும் குளுமையாகவே காணப்படும்.

தேனி அணை


குமுளி மலைப்பாதையை ஒட்டியுள்ள லோயர்கேம்ப் அருகே சுரங்கனாறு நீர்வீழ்ச்சி, சுருளி அருவி, வைரவனார் அணை, மங்கல தேவி கண்ணகி கோயில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பளியன்குடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் மணிமண்டபம் லோயர்கேம்பில் தான் உள்ளது.

மேலும் லோயர் கேம்பில் குமுளி மலைச்சாலையில் ஸ்ரீ வழிவிடும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப் பெரியாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த முருகன் கோவிலானது, மலை பகுதியில் உள்ளதாலும், சிறிய அளவிலான அருவியும் உள்ளதாலும் பக்தர்களுக்கு விருப்பமான கோவிலாகும்.

எழில் கொஞ்சும் அழகு


தினமும் சராசரியாக 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தேனி மாவட்டத்துக்கு வந்து செல்வது வழக்கம். கோடை விடுமுறை காலங்களில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல உகந்த இடம் தேனி மாவட்டம்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி