ஹோம் /தேனி /

Theni | சின்னச்சுருளி அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்.!

Theni | சின்னச்சுருளி அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்திலுள்ள சின்ன சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kombai, India

  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

  இந்நிலையில், பல்வேறு நீர்நிலைகளிலும் மழை நீர் ஆர்ப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. மேலும் சில சுற்றுலா இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

  அதேபோல, தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி வருகின்றது. இங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.  இந்நிலையில், ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

  மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

  ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்வதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Theni