ஹோம் /தேனி /

தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் இனி சந்தோஷமாக குளிக்கலாம்!

தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் இனி சந்தோஷமாக குளிக்கலாம்!

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி

Periyakulam Kumbakarai WaterFalls | தேனியில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையும் அதனை ஒட்டிய இடங்களையும் கொண்ட மாவட்டமாக இருக்கிறது தேனி. இந்த மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு அருவிகள், அணைகள் போன்றவை ரம்மியமான இயற்கையுடன் காட்சியளிக்கின்றன.

தென்மேற்கு பருவ மழை காலங்களில், மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை கொட்டியது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், இங்குள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளுக்குச் செல்ல செல்லவும்,  அருவி உள்ளிட்டவற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன், அணைகள் மற்றும் அருவிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

அதனைத் தொடர்ந்து, மீண்டும் கும்பக்கரை அருவியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த 12ஆம் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் மழை குறைந்ததால் நீா்வரத்தும் சீரானது. இதன் காரணமாக நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Theni, Water