ஹோம் /தேனி /

சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்..! சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்..!

சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்..! சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்..!

சுருளி அருவி

சுருளி அருவி

Suruli Falls | தேனி மாவட்டம் சுருளி அருவியில் அதிகளவில் நீர் வரத்து உள்ளதால், கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் வந்து குளிந்து மகிழ்ந்து செல்கின்றனர்.  சுற்றுலா பயணிகளுக்கு இந்த குளியல் மன மகிழ்ச்சியை தருகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் சுருளி அருவியில் அதிகளவில் நீர் வரத்து உள்ளதால், கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் வந்து குளிந்து மகிழ்ந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு இந்த குளியல் மன மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தனர்.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வந்தது. அப்போது, தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.

இந்நிலையில், ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகளவில் இருந்தது. மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க : தேனி மக்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இனி போடியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் வர போகுதாம்..!

ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர். மேலும், இதன் தொடர்ச்சியாக சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் சார்பில் நீர் வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதன் பிறகு, வெகுநாட்களாக மழை இல்லாமல் போனதால், அருவிகளில் வெள்ளம் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்தனர்.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா? 

தற்போது, நீர்வரத்து சீரானதால், தடைகளும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக  காணப்படுகிறது. கம்பம் அருகே உள்ள சுருவி அருவிக்கு ஹைவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து இங்கு அருவியாக கொட்டுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. வாரவிடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni