Home /theni /

சுருளியில் தொடரும் தடை.. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்.. வேதனையில் வியாபாரிகள்..

சுருளியில் தொடரும் தடை.. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்.. வேதனையில் வியாபாரிகள்..

சுருளி

சுருளி அருவி, தேனி மாவட்டம்

Theni Suruli Falls | தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி விடும் வியாபாரிகள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni | Theni Allinagaram
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளம் மற்றும் ஆன்மிக ஸ்தலமான சுருளி அருவியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவிப்பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சிறிய அளவிலான கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் சுருளி அருவி மூடப்பட்டுள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுருளி அருவி, தேனி மாவட்டம்


கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அருவி மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி சுருளி அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்படுவதால் போதிய வருவாய் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக சுருளி அருவி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள 5 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

சுருளி அருவி, தேனி மாவட்டம்


இதன் காரணமான தூவானம் மற்றும் இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரி  தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரால் ஆறுகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தூவானம் அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்தை குறைப்பதற்கு தூவானத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பவர் ஹவுஸ் வழியாக முல்லைப் பெரியாற்றுப்பகுதியில் திருப்பி விடலாம் எனவும் வெண்ணியாறு சுரங்கப்பாதையில் தண்ணீர் திருப்பி விட்டால் சுருளி அருவிக்கு குறையும் என சிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது மழை குறைந்துள்ள நிலையில் , தூவனத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பி விட்டால் அருவிக்கு நீர்வரத்து குறையும் . நீர்வரத்து குறைந்தால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிப்பர். இதனால் அறிவிப்பு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து சிறு வியாபாரிகள் நலன் மேம்படும் என சுருளி அருவியைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Cumbum, Local News, Theni

அடுத்த செய்தி