Home /theni /

தேனி சுருளி அருவியில் குளிக்க தொடரும் தடை... சுற்றுலாப் பயணிகள் சோகம்

தேனி சுருளி அருவியில் குளிக்க தொடரும் தடை... சுற்றுலாப் பயணிகள் சோகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவியில் பக்தர்கள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது சுருளி அருவியில் அதிக தண்ணீர் வருவதால், அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், பல்வேறு நீர்நிலைகளிலும் மழை நீர் ஆப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. மேலும் சில சுற்றுலா இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி வருகின்றது. இங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில், ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்னச் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்வதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

    மேலும், சுருளி அருவிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    சுருளி அருவியில் தொடா்ந்து 38 நாள்களாக நீா் வரத்துத் அதிகரித்துத் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அருவி பகுதியில் யாரும் செல்லாதவாறும், வன விலங்குகளுக்கு பாதிப்பு உள்ளதா என்றும் ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் கண்காணித்துத் வருகின்றனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி