ஹோம் /தேனி /

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவி

சுருளி அருவி

Suruli Falls | தேனி மாவட்டத்தல் உள்ள சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,  சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பத்திற்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இயற்கை அழகுடன் குளிச்சி ததும்பும் சுருளி அருவி. கேரளாவுக்கு அருகில் உள்ள இந்த அருவிக்கு, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, தூவானம், வெள்ளி மலை, வருசநாடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, வெள்ளப் பெருக்கு குறைந்து நீர்வரத்து குறைந்த பிறது, மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Falls, Local News, Theni, Tourist spots