Home /theni /

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

THENI : தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டத்திலுள்ள கும்பக்கரை அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தற்போது, சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் அதிக தண்ணீர் வருவதால், அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்க தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு நீர்நிலைகளிலும் மழை நீர் ஆப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. மேலும் சில சுற்றுலா இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும், தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி வருகின்றது. இங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் மழை பெய்வதால் சின்ன சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேகமலை, கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் உள்ளது சின்னச்சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள இந்த அருவிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்வதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், சுருளி அருவிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தேனியில் போதை மருந்து பழக்கம்; குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


கொடைக்கானல் மழை:

இந்நிலையில், கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போதும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவிதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஹைவேவிஸ் மலைபகுதி யில் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தூவானம், இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்ப ட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீா்வரத்து சீரானதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி