சுருளி அருவி திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆவதற்குள் மீண்டும் அருவி மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.
குளிக்க தடை :
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே தேனி, கோயம்புத்தூர் உட்பட 16 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க : தேனியில் மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
அதன்படி கடந்த மூன்று தினங்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது . தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தும் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது .
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும் ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருகை புரிந்து, அருவியில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இதையும் படிங்க : தேனி வீரபாண்டி தடுப்பணையில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்கள்
இந்நிலையில், கம்பம் சுற்றுவட்டார பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மேகமலை அருகே உள்ள தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது .
சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அருவி பகுதியில் கற்கள் விழும் அபாயம் இருப்பதாலும், நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இரண்டு மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 25ம் தேதி சுருளி அருவி திறக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் சுருளி அருவி திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆவதற்குள் மீண்டும் அருவி மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni