முகப்பு /தேனி /

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி

Theni News : தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுருளி அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் சிறப்பு வாகனம் இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மலையடிவாரத்தில், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இருக்கிறது. கொடைக்கானலில் இருந்து வரும் மழை நீர் அருவியாக ஓடுகிறது. கும்பக்கரை அருவி வனப்பகுதியில் இருப்பதால், தமிழகம், கேரளா பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 3ம் தேதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு நீர் வரத்து, தற்போது சீராகியுள்ளது.20 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில், அய்யப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர். அதேபோல், கம்பம் அருகே சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாகியுள்ளதால், சுருளி அருவியின் நுழைவாயிலின் முன் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க : ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகைக்கு தேனி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அருவிக்கு செல்ல முடியாததால், சுற்றுலா பயணிகள் நடந்தே செல்கின்றனர். முதியோர், மாற்றுத் திறனாளிகள் அருவிக்கு செல்ல சிரமம் ஏற்படுவதால், நுழைவு வாயில் இருந்து, அருவி வரை வனத்துறை சார்பில், வாகனம் இயக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Tamil News, Theni