ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு...

தேனி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு...

மின்தடை

மின்தடை

Theni District | தேனி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 19) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் மின்கோட்ட பராமரிப்பில் உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரகா நகர், ரத்தினாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Must Read :ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

இதேபோல் கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பகுதியில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார். எனவே, இப்பகுதி மக்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni