ஹோம் /தேனி /

அடுக்கடுக்கான கோரிக்கைகள்.. தேனியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

அடுக்கடுக்கான கோரிக்கைகள்.. தேனியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

X
ஓய்வு

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

theni protest | தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திண்டுக்கல் மண்டல பொதுச் செயலாளர் ராஜ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவில் 2015 முதல் நடப்பு மாதம் வரை வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியினை நிலுவையுடன் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவ காப்பீடு திட்டம் ஏனைய ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது போல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் பணி ஓய்வு பெறும் நாளில் வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பும் நிலை உள்ளது என்றும் இந்த நிலையை மாற்றி ஓய்வு பெறும் நாளில் அனைத்து பண பலன்களையும் ஏனைய துறைகளில் வழங்குவது போல் தங்களுக்கும் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் மற்ற துறைகளுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு போல போக்குவரத்து ஓய்வு ஊதியர்களுக்கும் முறைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்புகளை முறையாக அமல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கை மனு அளிக்கும் பொழுது மாநில தலைவர் ஜெயபாண்டியன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் மேற்கண்ட பலன்களை ஒப்படைக்கவிட்டால் மதுரை நீதிமன்ற வளாகத்தில் வருகின்ற 29ஆம் தேதி அன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Bus, Local News, Protest, Theni, Transport workers