தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதன்படி ராசிங்காபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களான ராசிங்கபுரம், சிலமலை, டி ஆர் புரம், சங்கரபுரம், நாகலாபுரம், சுப்புலாபுரம்,பொட்டிபுரம், சில்லமரத்துப்பட்டி, மல்லிகாபுரம், திம்மி நாயக்கன்பட்டி, சின்னபுத்திபுரம், சுந்தரராஜபுரம், தர்மத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாளை காலை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது .
அதேபோல சின்னமனூர் பகுதியில் உயரழுத்த கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதியில் மாற்றி அமைக்கும் பணிகளும், மின்கம்பங்கள் ஊன்றுவதற்கான பணிகளும் நாளை நடைபெற உள்ளதால் சின்னமனூர், பல்லவராயன்பட்டி, சின்னஓவுலாபுரம், தென்பழனி, அப்பிப்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், லோயர்கேம்ப், காமயகவுண்டன்பட்டி, துரைச்சாமிபுரம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது .
இதனால் ராசிங்கபுரம், சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.