Home /theni /

துணிப்பை விழிப்புணர்வு பாடல் வைரல்.. கனமழையால் மலையேற்றத்திற்குத் தடை - தேனி மாவட்ட செய்திகள்

துணிப்பை விழிப்புணர்வு பாடல் வைரல்.. கனமழையால் மலையேற்றத்திற்குத் தடை - தேனி மாவட்ட செய்திகள்

Song release 

Song release 

Theni District: இன்றைய தேனி மாவட்ட செய்திகள் ஒருசில வரிகளில்..

  இன்றைய (மே 17) தேனி மாவட்ட செய்திகள் ஒருசில வரிகளில்..

  விழிப்புணர்வு பாடல் வைரல் :-

  தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் பல  அறப்பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

  இந்த விழிப்புணர்வு பாடல் வெளியிடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் பனை மரக்காட்டில் நடைபெற்றது. இந்த பாடலை பனையேறும் தொழிலாளியான கருப்பையா வெளியிட்டார். இந்தப்பாடலானது அண்மையில் வெளியான 'ஓ சொல்றியா' பாடல் பாணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரிகளுடன் உருவாக்கப்பட்டு வெளியாகிய நிலையில் இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  கழிவு நீர் - கோரிக்கை மனு :-

  தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக கால்வாய் வசதி இல்லாமல் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அங்கேயே தேங்கி கிடப்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

  இதையடுத்து நேற்று 33வது வார்டு கவுன்சிலர் முருகன் தலைமையிலான அப்பகுதியை சேர்ந்த மக்கள் கம்பம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகராட்சித் தலைவர் வானிதா நெப்போலியன் மற்றும் ஆணையர் பால முருகன் ஆகியோரை சந்தித்து இச்சம்பவம் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் மற்றும் தலைவர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

  நவீன எரிவாயு தகனமேடை மூடல் :-

  தேனி மாவட்டம் தேனி நகர் பள்ளிவாசல் தெருவில் கொட்டக்குடி ஆற்றின் கரை அருகே தேனி அல்லிநகரம் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. இந்த நவீன எரிவாயு தகன மேடை அல்லி நகர கிராம கமிட்டி சார்பில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

  இந்த மயானத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட ஐந்து பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த மயானத்தில் சடலத்தை தகனம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது விறகுகளை வைத்து எரித்து பின்பு எரிவாயு மூலம் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (18/5/22) முதல் 3 நாட்களுக்கு எரிவாயு தகனமேடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக விறகு வைத்து பிணத்தை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கிராம கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  கனமழையால் மலையேற்றத்துக்கு தடை :-

  தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இடுக்கி மாவட்ட ஆட்சியரான ஷீபா ஜார்ஜ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மறுஉத்தரவு வெளியாகும் வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மலையேற்றம், சாகச பயணம், சாகச வாகனம் ஓட்டுதல் செய்யக்கூடாது எனவும், மலைமேல் உள்ள தோட்ட தொழிலாளர்கள் பணி செய்யக் கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


  கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு :-

  தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 161 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அமைந்துள்ள சலவைத் தொழிலாளர்களுக்கு சொந்தமான இடத்தை மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சலவைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சலவைத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர் .

  VAO பயிற்சி முகாம் :-

  தேனி மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் உட்பிரிவு அளவிடும் பணி தொடர்பான புத்தாக்க பயிற்சி முகாம் கடந்த 11ஆம் தேதி தொடங்கி தாலுகா அளவிலான ஐந்து இடங்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது. தேனி தாலுகாவில் பயிற்சி முகாம் தேனி கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது.

  இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சி மூலம் கிடைத்த அனுபவம் பயிற்சி அளிக்கப்பட்ட விதம் குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த பயிற்சி முகாமானது இன்றுடன் நிறைவு பெற உள்ளது.

  கல்லூரி விளையாட்டு விழா :-

  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான ஹாஜி கருத்தராவுத்தர் ஹளதியா கல்லூரியில் மாபெரும் விளையாட்டு விழாவின் தொடக்க விழா நடை பெற்றது. இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 நாட்கள் கல்லூரி ஆண்டு விழா நடைபெறும்.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி முழுமையாக நடைபெறாததால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கல்லூரி ஆண்டு விழா இன்று முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விளையாட்டு தினம், மகளிர் தினம், தமிழ் துறை, கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டி நடனம் உள்ளிட்ட ஒவ்வொரு நாளும் விதவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  இதில் கல்லூரியின் ஆட்சிமன்ற குழு செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி. M. தர்வேஷ் முகைதீன் மற்றும் கல்லூரியின் மேலாண்மை குழு தலைவர் ஜனாப். S. செந்தால் மீரான், கல்லூரியின் முதல்வர் ஹாஜி டாக்டர். H. முகமது மீரான் முன்னிலையில் கல்லூரி மைதானத்தில் கல்லூரி விழாவின் தொடக்க நாளான விளையாட்டு விழா நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக ஓட்டப்பந்தயம் ,நீளம் தாண்டுதல் ,ஈட்டி எறிதல் ,குண்டு எறிதல் ,போன்ற தடகள போட்டிகள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நடத்தப்பட்டது.

  இப்போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர். மேலும் இம்மாபெரும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கபடி, கொக்கோ ,கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து ,பூப்பந்து ,கால்பந்து, கிரிக்கெட் ,டேபிள் டென்னிஸ் ,சதுரங்கம் ,கேரம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் வரக்கூடிய ஒரு மாத காலம் நடைபெறும் என்பதுகுறிப்பிடத்தக்கதாகும். கல்லூரி பேராசிரியர்களுக்கு உணவு உண்ணும் வித்தியாச போட்டியும் நடத்தப்பட்டது.

  செய்தியாளர் : சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி