ஹோம் /தேனி /

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா - கம்பத்தில் மதநல்லிணக்கம்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா - கம்பத்தில் மதநல்லிணக்கம்

X
மும்மதத்தினர்

மும்மதத்தினர் கொண்டாடிய பொங்கல்

Cumbum Pongal festival 2023 | தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மும்மதத்தினர் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகர மன்றத் தலைவர் தலைமையில் மூன்று மதத்தைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சமத்துவ பொங்கல்

தமிழர்களின் பண்டிகையாகவும் விவசாயத்தை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். விவசாயத்தில் ஏற்பட்ட நல்ல விளைச்சலுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பூமி, சூரியன், விவசாய பணிகளுக்கு உதவிய கால்நடைபோன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடை செய்த நெல்மணிகளை வைத்து சர்க்கரைப் பொங்கல் கடவுளுக்கு படைத்து மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகையாக தமிழர்கள் வழிபட்டனர்.

மும்மதத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா 

பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மிக்க பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் பொழுது ஜாதி, மத பேதம் இன்றி சமத்துவமாக அனைவரும் இணைந்து கொண்டாட கூடிய தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை உள்ளது.

மும்மதத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகர மன்றத்தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் ஆணையாளர் பாலமுருகன் முன்னிலையில் கம்பம் நகராட்சி வளாக பகுதியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம்என மூன்று மதத்தை சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மும்மதத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா

இந்த நிகழ்ச்சியில் மூன்று மதத்தைச் சேர்ந்த குருமார்கள் இணைந்து நகராட்சி அதிகாரிகள்இணைந்து பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டனர்.

இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கம்பம் நகராட்சியை சேர்ந்த அனைத்து வார்டு கவுன்சிலர்களும் இணைந்து நகராட்சி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டப்பட்டது.

தேனி சிந்தலைச்சேரி அன்னை தெரசா கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.. கபடி, உறியடி என களைகட்டிய விளையாட்டு போட்டிகள்..

இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் நகர மன்றத்துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், நகராட்சி அனைத்து வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், நகராட்சி பொறியாளர் பன்னீர், சுகாதார ஆய்வாளர் அரசகுமார், நகராட்சி கட்டிட ஆய்வாளர் சலீம் ராஜா, சுகாதார அலுவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் என ஏராளமானோர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Pongal, Pongal 2023, Theni