ஹோம் /தேனி /

ஓய்வூதியம் இன்னும் வரல.. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்கள் தர்ணா

ஓய்வூதியம் இன்னும் வரல.. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்கள் தர்ணா

X
தர்ணா

தர்ணா போராட்டம்  

Theni News :தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதிய பணம் கோரி முதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் 3 பேர் ஓய்வூதிய தொகையை வழங்க கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மூன்று பேர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியைச் சேர்ந்த சின்ன வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும் தேக்கம்பட்டி ஊராட்சி சேர்ந்த தங்கவேலு என்ற நபரும் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு நாட்களாகியும் ஓய்வூதியம் வழங்கவில்லை எனக் கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சண்முகசுந்தராபுரம் ஊராட்சியில் சின்ன சுருளி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும்

தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும்,தற்போது வரை இருவருக்கும் ஊராட்சி நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தேனியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி நூதன முறையில் மனு அளித்த சிவசேனா கட்சியினர்

இதேபோன்று தேக்கம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தங்கவேல் என்பவருக்கும் ஊராட்சி நிர்வாகம் ஓய்வூதிய தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து மூன்று பேரும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓய்வூதிய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர் மூவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Pension Plan, Tamil News, Theni