Home /theni /

ஒரே நேரத்தில் பரவும் 3 காய்ச்சல் - தற்காத்துக் கொள்ள மருத்துவர் கூறும் வழிமுறைகள்..

ஒரே நேரத்தில் பரவும் 3 காய்ச்சல் - தற்காத்துக் கொள்ள மருத்துவர் கூறும் வழிமுறைகள்..

தேனியில்

தேனியில் பரவும் காய்ச்சல்கள்..

Theni District News : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் பரவும் மர்ம காய்ச்சலால் மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார் கம்பம் அரசு மருத்துவர் மகேஷ் பாண்டியன்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni | Tamil Nadu
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக  கம்பம், கூடலூர் ,போடி, சின்னமனூர், உத்தமபாளையம், தேனி போன்ற பல பகுதிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர் காய்ச்சல் பரவி வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது தேனி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. மற்றொரு பக்கம் டெங்கு காய்ச்சல். போதாக்குறைக்கு மழைக்காலங்களில் உண்டாகும் பருவ காய்ச்சலும் சேர்ந்து ஒரே நேரத்தில் மூன்று வகையான காய்ச்சல் பொதுமக்களுக்கு பரவி வருகிறது .

இந்த நிலையில் மழைக்காலங்களில் பரவும் மர்ம காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், மர்ம காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பற்றியும் கம்பம் அரசு மருத்துவமனை சார்பில், விளக்குகிறார் அரசு மருத்துவர் மகேஷ் பாண்டியன்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :-

மழைக்காலங்களில் பொதுமக்கள் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி மருத்துவர் கூறுகையில்,

" காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சரியான புரிதல் இருந்து, விழிப்புடன் செயல்பட்டால், காச நோய் தொற்றாமல் பாதுகாக்கலாம். தற்போது காலநிலை மாற்றம் காரணமாக, உடலின் வெப்பநிலையை சீராக வைக்க வேண்டும்.

அரசு மருத்துவர் மகேஷ் பாண்டியன்.


ஸ்வெட்டர், காலில் சாக்ஸ், கையுறை, போன்றவை அணிவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் அதிகம் பரவாமல் இருப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நல்ல நீரில் கொசுக்கள் மூலமே டெங்கு காய்ச்சல் பரவுவதால் , மழைநீர் வீடு அருகே அல்லது வீட்டை சுற்றி எங்கும் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அருந்தும் குடிநீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும். அதிக குளிர்ச்சியான பானங்களையும் அதிக சூடான பானங்களையும் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து , கொசு உற்பத்தியாவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் துணிகளை மொத்தமாக குவித்து வைத்தல், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பழைய டயர்களில் தண்ணீர் தேங்குதல், வீடுகளின் முன்பு நீர் தேங்குதல் போன்றவற்றின் மூலம் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இந்த மழைக் காலத்தில் டெங்கு, டைபாய்டு மட்டுமல்லாமல் சாதாரண காய்ச்சலும் பரவி வருகிறது. மக்கள் அனைத்து காய்ச்சலும் டெங்கு காய்ச்சல் என நினைத்து அச்சப்பட தேவையில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பகலில் கடிக்கும் கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது . மக்கள் பகல் நேரத்திலும் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்

அடிக்கடி கை கழுவுவது, முகக் கவசம் அணிவது மூலமாகவும் மக்கள் காய்ச்சல் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்றார்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி