ஹோம் /தேனி /

தேனி திம்மரசநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவுடன் சென்று வலியுறுத்திய கிராமத்தினர்..

தேனி திம்மரசநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவுடன் சென்று வலியுறுத்திய கிராமத்தினர்..

X
ஆட்சியரிடம்

ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

Theni Thimmarasanayakanur | ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமன் மற்றும் திம்மரச நாயக்கனூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுஅளித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

1961 ஆண்டு வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மீண்டும் நடத்த வேண்டும் என்று கூறி ஆண்டிபட்டி எம்எல்ஏ தலைமையில் திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜக்காளம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் நளான்று நடைபெற்று வந்து உள்ளது. அந்த திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது என்றும்கடந்த 1961-ம் வருடம் வரை தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டி தங்கள் கிராமத்தில் நடைபெற்று வந்துள்ளது என்றும் திம்மரச நாயக்கனூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் தற்போதைய சூழலில் தங்களது கிராமத்தில் திருவிழா மட்டும் நடைபெற்று வருகிறது எனவும், மீண்டும் தங்கள் கிராம வழக்கப்படி ஜக்காளம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு திமரச நாயக்கனூர் கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம் என ஊர் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனால் பாரம்பரிய வழக்கப்படி ஜக்காளம்மன் கோவில் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டி தேனி மாவட்ட ஆட்சியரைச்சந்தித்து மனு அளிக்கஆட்சியர் அலுவலகத்திற்கு திம்மரச நாயக்கனூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து வந்தனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமன் மற்றும் திம்மரச நாயக்கனூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுஅளித்தனர்.

தேனியில் சாரல் மழை - சுருளி அருவியில் குளிக்க தடை  

பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் கிராம வழக்கப்படி கோயில் திருவிழா அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு போட்டியினை தேனி மாவட்ட ஆட்சியர் துவங்கி வைக்க வழி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கூறும் பொழுது ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Theni