ஹோம் /தேனி /

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி சின்னமனூரில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள்..

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி சின்னமனூரில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள்..

தேனி

தேனி

Theni Thevar Jayanthi | தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் மறவர் சமுதாய கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள மறவர் சமுதாய கல்வி அறக்கட்டளை சார்பாக எதிர்வரும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அக்டோபர் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் இயங்கி வரும் மறவர் சமுதாய கல்வி அறக்கட்டளை சார்பாக சின்னமனூர் மறவர் மக்கள் மன்ற வளாகத்தில் சின்னமனூர் பகுதியில் கல்வி பயின்று வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா?

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் பங்கு பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மறவர் சமூக நல சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நினைவுப் பரிசு, கேடயம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Muthuramalinga Thevar, Theni, Thevar Jayanthi