ஹோம் /தேனி /

மழையில் இருந்து பாதுகாக்க வழி இல்லை... தேனியில் நெல்மணிகளை தனியாருக்கு விற்கும் விவசாயிகள்...

மழையில் இருந்து பாதுகாக்க வழி இல்லை... தேனியில் நெல்மணிகளை தனியாருக்கு விற்கும் விவசாயிகள்...

தேனி

தேனி

Theni | தேனி மாவட்டத்தில் அறுவடை துவங்கியுள்ள நிலையில் , இதுவரை தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால் அறுவடையான நெல் மணிகள் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், இதுவரை தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததால் அறுவடையான நெல் மணிகள் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் சிறந்து விளங்கும் தேனி மாவட்டத்தில் வாழை, திராட்சை, கரும்பு, தென்னை, மா போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அதிகளவில் நெல் விவசாயமே அடையாளமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனத்தை பயன்படுத்தி, 14,707 ஏக்கர் நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் முல்லை பெரியாற்று தண்ணீரை பயன்படுத்தி, அதிக ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தேனி மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் எப்போதும் செழிப்பாக இருப்பதை காணமுடியும்.

இதையும் படிங்க : மகளிர் நல வாரிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்... தேனி கலெக்டர் தகவல்...

தேனி மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளான

பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஜெயமங்களம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி , குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதியில் 2000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சோத்துப்பாறை அணை தண்ணீர் மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி, நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தற்போது, தேனி மாவட்டத்தின் வடக்கு, மற்றும் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை பணிகள் :

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு விளைவித்த நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

போதுமான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனியாரிடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் பருவமழை இதனுடைய நெல் அறுவடை செய்ய முடியாமல் தவித்த விவசாயிகளுக்கு தற்போது மழை குறைந்த நிலையில் நெல் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : முழுமை அடையாத சாலை பணியால் அவதிப்படும் கூடலூர் மக்கள்

கூடலூர், கம்பம், உத்துமபாளையம், சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்ட நெல் சாகுபடி சில வாரங்களாக அறுவடையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடையின்போது அரசு தற்காலிக கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்து வந்தது.

இந்த ஆண்டு இதுவரையிலும் பல பகுதிகளில் கொள்முதல் நிலையம் அமைக்காததால் உத்தமபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் ரோட்டோரங்களில் கொட்டி வைத்துள்ளனர் விவசாயிகள்.

நெல் கொள்முதல் நிலையம் :

ஏற்கனவே இந்த ஆண்டு பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பெண்மணிகளை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், அவ்வப்போது பெய்யும் மழையால் நெல் நனைத்து வீணாகிறது. இதனை பாதுகாக்க தார்பாய் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். இதனால் உத்தமபாளையம் பகுதிகளில் அறுவடை பணிகளை வேகமாக நடத்தி தனியாருக்கு நெல்மணிகளை விற்பதில் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து உத்தமபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விளைச்சல் குறைவு, விலை குறைவு என்பதால் ஏற்கனவே கவலையில் உள்ளோம். மேலும் உரம் விலை உயர்வு, மழையினால் ஏற்பட்ட சேதம், ஆட்கூலி என செலவுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது அரசு கொள்முதல் நிலையங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லாததால் தனியார் வியாபாரிகளிடமே விற்பனை செய்ய வேண்டியதாக உள்ளது. அவர்கள் கூறும் விலைக்கே கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது . அரசு விரைவாக நேரடி கொள்முதல் நிலையத்தை அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni