முகப்பு /தேனி /

தேனி கண்ணகி கோயில் திருவிழா.. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் என்ன?

தேனி கண்ணகி கோயில் திருவிழா.. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் என்ன?

X
தேனி

தேனி திருவிழா

Theni news | தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் தேக்கடியில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கண்ணகி கோயில் திருவிழா:-

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெற முன் ஏற்பாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் வரும் மே 5ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி மூங்கில் தோப்பு கூட்டரங்கில், இரு மாநில அதிகாரிகளிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்தும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டன.

கோரிக்கைகள்:-

இந்த கூட்டத்தில், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை இடுக்கி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து, நடைபாதையில் பக்தர்களுக்கு கேரள வனத் துறையால் ஏற்படுத்தப்படும் கெடுபிடிகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

அறக்கட்டளையினர், கண்ணகி கோவில் திருவிழா அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அறக்கட்டளை சார்பாக கூடுதலான வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை வைத்தனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதலான சுகாதார வளாகம், முறையான குடிநீர், முதல் உதவி மையம் போன்றவை ஏற்படுத்தித் தர கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்ற அரசு அதிகாரிகள், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றுகூறினர்.

வழக்கமாக கண்ணகி கோவில் திருவிழாவிற்கு வாகனங்கள் செல்ல காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கப் பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு 2.30 மணி வரை மட்டுமே கேரள வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறினர்.

மலைப் பக்கத்தில் உள்ள கண்ணகி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வாகன பாதையில் உள்ள முட்புதர்களை வனத்துறையினர் முழுமையாக அகற்றி தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், “எங்கள் அறக்கட்டளையின் நீண்ட நாள் கோரிக்கையான கண்ணகி கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்பதை முன்வைத்தோம். ஆனால், அந்த கோரிக்கையை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

கோவிலில் மூன்று நாள் திருவிழா நடப்பதற்காகவும், ஒரு நாள் முழுவதும் ஜிப் வாகனங்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கூடுதல் மணி நேரம் பெறவும் தொடர்ந்து போராடுவோம் என்று கூறிய அறக்கட்டளை நிர்வாகிகள், மக்கள் கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடுவதை கேரளா அரசு விரும்பவில்லை என்று குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni