முகப்பு /தேனி /

தேனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

தேனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

X
மாற்றுத்திறனாளிகளுக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Theni News | தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம், டிரை சைக்கிள் செயற்கைக் கால் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒக்கலியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இந்த திருமண மஹாலில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய 10 இருசக்கர மோட்டார் வாகனம், 3 சக்கர சைக்கிள், 2 சக்கர நாற்காலி, செயற்கை கால், ஊன்றுகோல் உள்ளிட்ட பொருட்கள் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா, உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி, சின்னமனூர் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு மற்றும் கம்பம் நகர திமுக செயலாளர் சூர்யா செல்வகுமார், வீரபாண்டியன் கம்பம் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni