முகப்பு /தேனி /

Theni Weather Update : தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய கோடை மழை..!

Theni Weather Update : தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய கோடை மழை..!

X
தேனியில்

தேனியில் பெய்த மழை

Theni Weather Update : தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ள நிலையில் தற்போது திடீரென வானிலை மாறி பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியது.

இந்த சூழலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தேனியில் பெய்த மழை

இதன் காரணமாக தேனி மாவட்டத்தின் வெப்பம் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென வானிலை மாறி கூடலூர், கம்பம் , தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், லோயர் கேம்ப் , பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மாலை 4 மணிக்கு மேல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்தது. பின்னர் இரவு வேளையிலும் கனமழை மீண்டும் பெய்ய ஆரம்பித்தது . இரவு வேலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகவும் மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதிகளிலும், கூடலூர், கம்பம் , தேனி, பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து உள்ளது.

    First published:

    Tags: Local News, Theni