ஹோம் /தேனி /

ஒரு கிலோவுக்கு ரூ.50 கிடைக்கும்... ஊமத்தங்காய் பறித்து வாழ்க்கை நடத்தும் தேனி கிராமப் பெண்கள்

ஒரு கிலோவுக்கு ரூ.50 கிடைக்கும்... ஊமத்தங்காய் பறித்து வாழ்க்கை நடத்தும் தேனி கிராமப் பெண்கள்

தேனி

தேனி ஊமத்தங்காய் காயவைப்பில் பெண்கள்

நாட்டு மருத்துவ பயன்பாட்டிற்காக ஊமத்தங்காய் பறிக்கும் தொழிலில் தேனியின் கிராமப் புறங்களைச் சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய ஊமத்தங்காயை பறித்து, அதன் விதையை சாலை ஓரங்களிலேயே காய வைத்து, ஊமத்தை விதையை நாட்டு மருந்து கடையில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர் தேனி மாவட்டம் ஆசாரிப்பட்டியை சேர்ந்த கிராமத்தினர்.

தினசரி தொழிலாளர்கள்:

தேனி மாவட்டத்தில் உள்ள சாலையோரப் பகுதிகளிலும் தரிசு நிலங்களிலும் கிடைக்கும் ஊமத்தைச் செடியில் இருந்து ஊமத்தங்காயை பறித்து காயில் இருக்கக்கூடிய விதைகளை சாலையோரங்களில் காய வைத்து அதனை நாட்டு மருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதை தினசரி தொழிலாக செய்து வருகின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஊமத்தங்காய் காய வைக்கும் பெண்கள்

ஊமத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை என பல பெயர்களால் அழைக்கப்படக்கூடிய ஊமத்தை மலை அடிவாரப் பகுதிகளிலும் சாலையோர தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளரக்கூடிய தன்மை கொண்டது. விசத் தன்மை கொண்ட இந்தச் செடியில் உள்ள ஊமத்தங்காய் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

ஊமத்தங்காய் காய வைக்கும் பெண்கள்

வாத நோய், நரம்பு மண்டலம் சம்பந்தமான நோயை கட்டுப்படுத்தவும் தூக்கமின்மை, பேன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு நாட்டு வைத்திய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு ஊமத்தங்காய் பயன்படுவதாக கூறப்படுகிறது.

ஊமத்தங்காய் காய வைக்கும் பெண்கள்

ஊமத்தங்காய் விதைகளை மருத்துவப் பயன்பாட்டுக்காக தேனி மாவட்டத்தில் உள்ள நாட்டு மருந்து கடை உரிமையாளர்கள் மொத்த விலைக்கு பெற்றுக் கொள்கின்றனர்.

ஊமத்தங்காய் காய வைக்கும் பெண்கள்

ஊமத்தங்காய் மட்டுமல்லாமல் நெருஞ்சி முள், கீழாநெல்லி, வேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ பயன்பாட்டு கொண்ட பொருட்களை பறித்து நாட்டு மருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதை தொழிலாக செய்து வருகின்றனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.

இது குறித்து பேசிய தேனி மாவட்டம் ஆசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ‘நாட்டு மருந்து கடைகளுக்கு தேவைப்படும் மருத்துவப் பொருட்களை சாலையோரங்களிலும் காட்டு பகுதிகளிலும் பறித்து அதனை காயவைத்து மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றோம்.

தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி முதல் லோயர் கேம்ப் வரையில் உள்ள சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய ஊமத்தங்காய் விதைகளை காய வைத்து ஆண்டிபட்டியில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்து வருகிறோம். சாலை விவரங்களில் உள்ள ஊமத்தங்கரை பறித்து அதனை கல்லால் உடைத்து சாலை ஓரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காயவைத்து அதனை நாட்டு மருந்து கடையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். நாளொன்றுக்கு ஐந்து முதல் 10 கிலோ வரை விற்பனை செய்வதற்காக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடுமையான வெயிலில் வேலை செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni