முகப்பு /தேனி /

தேனி வீரபாண்டி கோவில் திருவிழா.. ராட்டினம் ஏலத்தில் இவ்வளவு தொகையா?

தேனி வீரபாண்டி கோவில் திருவிழா.. ராட்டினம் ஏலத்தில் இவ்வளவு தொகையா?

X
தேனி

தேனி வீரபாண்டி கோவில் திருவிழா

Theni Veerapandi Temple : தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் ராட்டினம் ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Theni, India

உலகப் புகழ்பெற்ற தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் ராட்டினம் ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், வீரபாண்டி சித்திரைத் திருவிழா கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஏலமும்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா :

தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா உலக புகழ் பெற்றதாகும். இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 7 நாட்கள் வரை இரவும் பகலாகவும், மிக சிறப்பாக நடைபெறும். இந்த கோவிலுக்கு பக்தர்கள் காவடி, அக்னி சட்டி, பூ மிதித்தல் போன்ற வழிகளில் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். திருவிழா நடைபெறுவதற்காக, கடைகள் மற்றும் ராட்டினம் போன்றவை ஏலம் விடப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க : மீண்டும் புதுச்சேரி மக்களின் நினைவில் மணக்குள விநாயகர் யானை லட்சுமி..

இந்த ஆண்டு கௌமாரி அம்மன் திருக்கோவில் விழாவை முன்னிட்டு திருவிழா கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் ராட்டினம் ஏலம் நடைபெற்றது.இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி முன்னிலையில் நான்கு பிரிவுகளில் நடைபெற்ற ஏலத்தில் முடி காணிக்கை காண ஏலம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு 9 லட்சத்தி 51 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

ஏலத்தொகை எவ்வளவு?

ராட்டினம் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் அதற்கான ஏலத் தொகை ஒரு கோடி 50 லட்சம் ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் யாரும் ஏலம் கேட்காத நிலையில் ராட்டின ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று கண் மலர் ஏலம் மற்றும் உணவு மற்றும் சாலையோர கடைகளுக்கான ஏலமும் இந்து சமய அறநிலை துறை நிர்ணயித்த தொகையை கேட்காததால் இணை ஆணையர் தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்தி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மே 9 தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவிற்கான ஏலத்தில் இந்து சமய அறநிலைத்துறை நிர்ணயித்த தொகை கடந்தாண்டை காட்டிலும் அதிகப்படுத்தியுள்ளதால் ஏலமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Theni