Home /theni /

Theni | அரசு பேருந்து பற்றாக்குறை: கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள்

Theni | அரசு பேருந்து பற்றாக்குறை: கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள்

கல்லூரி

கல்லூரி மாணவர்கள்

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை தப்புகுண்டுப் பகுதியில் முறையாக பேருந்து இயக்கப்படாததால் கல்லூரிக்கு சரிவர செல்ல முடியவில்லை என்று மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை தப்புகுண்டு மார்க்கமாக வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு அரசு பேருந்தை தங்கு தடை இன்றி இயக்கக்கோரி கல்லூரி மாணவியர் தேனி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அரசு பேருந்து

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து தேனி வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 35 மாணவியர் 75 மாணவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்காக காலையும் மாலையும் ஒரு அரசு பேருந்து மயிலாடும்பாறை தப்புக்குண்டு மார்க்கமாக வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மாணவர்கள்


மிகவும் பழுதான இந்த பேருந்து வாரத்தின் மூன்று நாட்கள் செயலிழந்து நடு வழியில் நின்று விடுகிறது. இதனால் வனப்பாதைக்குள் மாணவ, மாணவியர் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் ஆபத்து பயணம் மேற்கொண்டு வேறு பேருந்து ஏறி கல்லூரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மாணவர்கள்


அதோடு ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை காரணமாக வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் பேருந்து இயக்கப்படுவதில்லை. இதனால் அன்று மாணவ, மாணவியர் கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மாணவர்கள்


கல்லூரி மாணவ, மாணவியரின் நலன் கருதி அரசு பேருந்து தங்கு தடை இன்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி ஆட்சியர் அலுவலகம் வந்த வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவியர் ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி