தேனி மாவட்டம் வீரபாண்டி கோவில் 8 நாள் சித்திரைத் திருவிழா தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகு குத்தி அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
வீரபாண்டி திருவிழா :-
தேனி மாவட்டம் வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் கத்திரி வெயிலின் துவக்கத்தில் 8 நாள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் .
இந்த வருடம் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கம்பம் நடப்பட்டு 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 8 நாள் திருவிழா நடைபெற உள்ளது. இன்று தொடங்கியது சித்திரை முதல் நாள் திருவிழாவில் கெளமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.
மஞ்சள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடினார்கள் பின்னர் ஆற்றங்கரையில் அக்னி சட்டி, பால்குடம் காவடி ஆயிரம் கண் பானை மண்கலயத்தில் தீர்த்தம், மற்றும் உடலில் சேறு பூசி கெளமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 1 மணியளவில் இருந்தே வரத்தொடங்கினர். துவக்க முதல் நாளே பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த திருவிழாவிற்கு 1290 காவலர்கள் 500ருக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள்,மருத்துவ உதவி மையம். காவல்துறை உதவி மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சித்திரை திருவிழாவின் சிறப்பாக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினம் பழங்கால விளையாட்டு கடைகள் மற்றும் சர்க்கஸ்,கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் காவல்துறையினர் மூன்று சுற்றுக்களாக பணியில் ஈடுபட உள்ளனர். இந்த சித்திரை திருவிழாவிற்காக முல்லைப் பெரியாற்றிலிருந்து 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Local News, Theni