ஹோம் /தேனி /

தேனியில் யானை தந்தம் விற்க முயற்சி - கேரள ஆசாமிகள் உட்பட ஏழு பேர் கைது 

தேனியில் யானை தந்தம் விற்க முயற்சி - கேரள ஆசாமிகள் உட்பட ஏழு பேர் கைது 

யானை தந்தம் கடத்தி கைதானவர்கள்

யானை தந்தம் கடத்தி கைதானவர்கள்

Theni | தமிழக கேரள எல்லையில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கேரளா மாநிலத்தைச் சேர்ந்த உட்பட ஏழு பேரை வனத்துறையினர்கைது செய்து இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழக கேரள எல்லையில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த உட்பட ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்து இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான குமுளி சுற்றுவட்டார பகுதிகளில் யானைத்தந்தங்களை கடத்தி வந்து சிலர் யானை தந்தம் விற்க முயல்வதாக மதுரை வனத்துறை விஜிலென்ஸ் குழுவிற்கு ரகசியல் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக எல்லையான குமுளி மலைப்பாதைகளிலும், வைரவனார் ஆற்று பகுதியிலும் வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வைரவனார் பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பரிசோதனை செய்தபோது இருவரும் நான்கு கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்களை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க : தேனியில் மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

வனத்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முருகன் மற்றும் 63 வயதாகும் வெள்ளையன் ஆகியோர் யானை தந்தங்களை விற்க முயன்றது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், கம்பம் மேற்கு மற்றும் கூடலுார் வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். அதில் வைரவனார் ஆற்றுப்பகுதியில் மீன் பிடிக்க சென்றபோது அங்கு யானை தந்தங்கள் இருந்ததை பார்த்ததாகவும் , அந்த தந்தங்களை விற்பனை செய்ய முற்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்து தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மேத்யூ(53), ஜோன்சன்(51) , நிதின்(30), அசோகன்(50), அப்துல்அஜீஸ்(34)  ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்று தலைமறைவானவர்களையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து அவர்களை உத்தமபாளையம் மேஜிஸ்ரேட் முன் ஆஜர்படுத்தி உத்தம்பாளையம் சிறையில் அடைத்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni