ஹோம் /தேனி /

தேனியில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி.. ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு..

தேனியில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி.. ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு..

X
தேனியில்

தேனியில் முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி

Theni District News : தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடந்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று முப்படை வீரர் கொடி நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடந்தது.

கொடி நாள் : 

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும் பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டில் டிசம்பர் மாதத்தின் 7ம் நாள் படை வீரர் கொடி நாளாக மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப் பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையிலும் முப்படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க : தேனி-போடிநாயக்கனூர் ரயில் பாதையில் நவீன ஆய்வு - மக்களுக்கு எச்சரிக்கை

இந்நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்கள் தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படை வீரர் செந்தில்குமாருக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் 63,000 முருகனுக்கு 50000, ஆறுமுகம் ரூபாய் 50,000 என பதினோரு பயனாளிகளுக்கு சுமார் நான்கு லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni