Home /theni /

தேனியில் நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை- உங்கள் ஊர் உள்ளதா தெரிந்துகொள்ளுங்கள்

தேனியில் நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை- உங்கள் ஊர் உள்ளதா தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை(16/07/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

    மின்தடை

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை( சனிக்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    அதன்படி உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம், ராயப்பன்பட்டி, மல்லிங்கபுரம், கோகிலாபுரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அணைபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாளை காலை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது .

    இதனால் உத்தமபாளையம், பண்ணைப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி