Home /theni /

தேனியில் நள்ளிரவு ஜவுளிக்கடையில் புகுந்து துணிகளைத் திருடிய நபர்கள் - வேகமாக பரவும் சிசிடிவி காட்சிகள்

தேனியில் நள்ளிரவு ஜவுளிக்கடையில் புகுந்து துணிகளைத் திருடிய நபர்கள் - வேகமாக பரவும் சிசிடிவி காட்சிகள்

தேனி

தேனி திருட்டு

தேனியில் ஜவுளி கடையில் துணிகளை கொள்ளை அடித்த நபரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி அருகே இரவு பூட்டி விட்டு சென்ற ஜவுளி கடையில் துணிகளை கொள்ளை அடித்த நபர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது .

கொள்ளைச் சம்பவம்

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே அமைந்துள்ளது பிரபல திருப்பூர் கலெக்ஷன் என்ற ஜவுளிக்கடை. அரண்மனைபுதூரைச் சேர்ந்த பிரபு என்பவர் இந்த ஜவுளிக்கடையை நடத்தி வருகிறார். காலை 9 மணிக்கு கடையை திறந்து இரவு 10 மணிக்கு கடை அடைத்து விட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் வழக்கம் போல செப்டம்பர் 13-ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், நள்ளிரவு வேலையில் 2 வாலிபர்கள் ஜவுளிக்கடையின் பின்புற தகரத்தை உடைத்து கடைக்கு உள்ளே கொள்ளையடிப்பதற்காக புகுந்துள்ளனர்.

ஜவுளிக்கடையில் திருட்டு  
திருட்டு நடைபெற்ற கடை


கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடிவிட்டு ஓட முயன்றனர். அப்போது இதை கவனித்த கடையின் காவலாளி அவர்களை துரத்தி பிடிக்க முயற்சித்த போது அவர்களில் ஒருவர் ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார் கடையின் காவலாளி.

கடையின் உரிமையாளர் பிரபு அங்கு வந்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் தனது கடைக்கு திருட வந்த நபரை பிடித்து ஒப்படைத்துள்ளார்.

நள்ளிரவு வேளையில் ஜவுளிக்கடையில் திருடிய நபரை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் வயல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதாகும் சதீஷ்குமார் என்பதும், ஜவுளி கடையில் திருடுவதற்கு உடன் வந்த நபரும் வயல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் பிரகாஷ் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. ஜவுளி கடையில் திருடியதற்காக பிடிபட்ட சதீஷ்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றொரு நபரான பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் .

ஜவுளி கடையில் உள்ள துணிகளை இரண்டு நபர்கள் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது
Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி