முகப்பு /தேனி /

தேக்கடி மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..! குஷியில் சுற்றுலா பயணிகள்..!

தேக்கடி மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..! குஷியில் சுற்றுலா பயணிகள்..!

X
தேக்கடி

தேக்கடி மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Thekkady Flower Fair Extended : தேக்கடி 15வது மலர்கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளதால் மேலும் ஒரு வாரம் மலர் கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தேக்கடி 15 வது மலர்கண்காட்சி மேள தளங்களுடன் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர் . மலர் கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளதால் மேலும் ஒரு வாரம் மலர் கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு தேக்கடி 15 வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15 வது மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், (ஏப்ரல் 1-ல் ) தொடங்கி மே மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 44 நாட்கள் நடைபெற இருந்தது.

தேக்கடி மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மலர் கண்காட்சி தொடங்கிய நாள் முதல் மலர் கண்காட்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது . தேக்கடி பகுதியில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை தமிழக மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மலர் கண்காட்சிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் இரவு வேலைகளில் அதிகமான சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சிக்கு வருகை புரிகின்றனர்.

விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் மே 14ஆம் தேதி வரை நடைபெற இருந்த மலர் கண்காட்சி , மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் மலர் கண்காட்சி என்பதால் தற்போது புதிதாக பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 3 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட சுருளி அருவி..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலர்கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் புதிதாக கலை நிகழ்ச்சிகளும் , 30,000 சதுர அடியில் 50க்கும் மேற்பட்ட வகையான மலர்களை கொண்டு பார்வையாளர்களை கவரும் விதமாக மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதும்,

பார்வையாளர்களை கவரும் விதமாக வண்ண விளக்குகள், குழந்தைகளைக் கவரும் உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளதும் சிறப்பாக உள்ளதாக சுற்றுலா பணிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் . கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே தமிழக மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்

இந்த மலர் கண்காட்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

First published:

Tags: Local News, Theni