முகப்பு /தேனி /

தேனியில் காளையிடமிருந்து கன்றை காப்பாற்றியபோது கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு மாடு..

தேனியில் காளையிடமிருந்து கன்றை காப்பாற்றியபோது கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு மாடு..

X
கால்வாயில்

கால்வாயில் விழுந்த பசு மாடு

Theni District News : தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கன்றை காப்பாற்றும் முயற்சியில் விழுந்து மாட்டிக்கொண்ட பசுவை தீயணைப்பு துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சுமார் 6 அடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதன் அருகே கன்றுடன் பசுமாடு நின்று கொண்டு இருந்தது.

அச்சமயத்தில் அங்கே வந்த காளை மாடு ஒன்று கன்றைத் தாக்க முயற்சித்தது. கன்றை காளை மாட்டிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் பசுமாடு நிலை தடுமாறி அருகில் உள்ள ஆறடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்து தத்தளித்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டு கன்றுடன் இணைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து தீயணைப்புத் துறையினரின் இந்த மீட்பு முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Theni