முகப்பு /தேனி /

தேனியில் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

தேனியில் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

X
ஊர்தி

ஊர்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Theni protest | தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமை சங்கம் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமையில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட கோரியும்,

அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்துடன்பணி வழங்கிட கோரியும்,

ஓட்டுனர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை கலைந்து புதிய ஊதிய திருத்தம் வழங்கிடவும், ஓட்டுநர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வுதத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட நிலையில் , தங்களது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் மருத ராஜன் பொருளாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Protest, Theni