ஹோம் /தேனி /

தேனியில் 54 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுருளி அருவி - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தேனியில் 54 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சுருளி அருவி - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

சுருளி

சுருளி அருவி

Theni suruli falls | தேனி மாவட்டம் சுருளி அருவியில் 50 நாட்கள் கழித்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kambam (Cumbum), India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளம் மற்றும் ஆன்மிக ஸ்தலமான சுருளி அருவியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நீர்வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது.

சுருளி அருவி

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து, சுருளி அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறையில் பெய்து வரும் மழையால் அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது.

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவிப் பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க கடந்த 54 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுருளி அருவிக்கு வரும் நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து செப்டம்பர் 25ஆம் தேதி முதல் சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுருளி அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட தகவல் தெரிந்தவுடன் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளித்து மகிழ்வதற்காக அதிகளவில் வருகை புரிந்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni