Home /theni /

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 32-வது நாளாகத் தடை

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 32-வது நாளாகத் தடை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 32-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
    சுருளி அருவியில் வெள்ளம் அதிகரித்து வருவதால், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், வைகை அணையில் தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. வைகை அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக மீண்டும் 70 அடியை தாண்டியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வைகை அணையில் இருந்து 4,800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,736 கன அடி நீர் வருகிறது. நேற்று 4,800 கன அடி வரை திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2,293 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    நீர் இருப்பு 5,829 மி.கன அடியாக உள்ளது. இதே போல் தொடர் மழை காரணமாக நேற்று 136.40 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை 136.60 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 2,313 கன அடி. நேற்று 933 கன அடி நீர் திறக்கப்பட்டு 2 ஜெனரேட்டர்களில் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இன்று காலை முதல் மீண்டும் 1,866 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் இருப்பு 6,269 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது.

    அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் உபரி நீர்வெளியேற்றப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 491 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் உள்ளது. வரத்து 57 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி. தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று 32-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கும்பக்கரை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியாறு 5.2, தேக்கடி 1.8, கூடலூர் 4.8, உத்தமபாளைம் 4.6, வைகை அணை 2.6, சோத்துப்பாறை 11, ஆண்டிபட்டி 7.2, அரண்மனைபுதூர் 20, போடி 5.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி