முகப்பு /தேனி /

தேனிக்கு போறீங்களா? கோடை வெப்பத்தால் வறண்டது சுருளி அருவி!

தேனிக்கு போறீங்களா? கோடை வெப்பத்தால் வறண்டது சுருளி அருவி!

X
வறண்ட

வறண்ட சுருளி அருவி  

Theni suruli falls | தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து முற்றிலும் குறைந்து அருவி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவியில் குளித்து மகிழ்வதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் இறை வழிபாட்டுத் தலமாகவும்

உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்த குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில் கோடை கால விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்பொழுது கோடை காலம் தொடங்கியதால் சுருளி அருவிக்கு நீர் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. இதனால் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் .

தேனி மாவட்டத்தில் கோடைவெயில் அதிகமாக இருந்தால் சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது முற்றிலும் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது. சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளனர் .

கோடை காலம் என்பதால் சுருளி அருவிக்கு ஆனந்த குளியலுக்காக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், அருவியில் நீர்வரத்து இன்றி காணப்படுவதால் ஏமாற்றமடைந்து திரும்பி செல்கின்றனர்.

ALSO READ | பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் சித்திரை மாத சிறப்பு வழிபாடு..

சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் முற்றிலும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் சுருளி அருவி வரண்டு காணப்படுகிறது.

மேகமலையில் அமைந்துள்ள தூவானம் அணைப்பகுதியில் இருந்து தமிழ் புத்தாண்டு அன்று தண்ணீர் திறக்கப்பட்டு அதன் மறுநாளே தண்ணீர் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து நேற்று வரை லேசான நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது முற்றிலும் நீர்வரத்து குறைந்து சுருளி வறண்டு காணப்படுகிறது. சுருளி அருவிக்கு கோடைகால விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஏமாற்றத்துடன் செல்வதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Theni